என் அன்பு தோழிக்கு,
என்னிடம் ஒரு வார்த்தை சொன்னியா?
ஒன்னுமே இல்லை.
இனிமேல் நான் ஒன்னுமே கேட்கமாட்டேன்.
நீ ஆச்சு. நான் ஆச்சு.
நமக்குள் ஒரு சிறு நார் நட்பை வைத்துக்கொண்டு
நாட்களை ஓட்டுவோம்.
சே என்ன பொழப்பு இது?
நட்புக்குள் இப்படி ஒரு களங்கம் வந்துவிட்டதே.
உள்ளுக்குள் சொல்ல முடியாத ஒரு கனமான உணர்வு.
இது எல்லாம் உனக்கு, இல்லை,
யாருக்கு புரியப்போது
என்னை தவிர ?
இதற்கு காரணம் நான் என்று
நினைக்கும்போது
காலம் சரி செய்யமுடியாத
வேதனை.
எப்படி இருந்தோம் சந்தோஷமாய்?
அது எல்லாம் ரொம்ப தூரமாய்
இருக்கு.
கவிதையாய் சொல்லவும் மனம்
சம்மதிக்கவில்லையே.
உன்னை போல் இருட்டில் என்னால்
இருக்க முடியாது.
அவ்வளவு பலகீனமான ஜீவன் நான்.
என் வழியில் நான் இருக்கிறேன்.
உன் வழியில் நீ இரு.
இரு பாதைகளும் சேரும்போது
பார்த்துக்கலாம்.
posted @ 6:22 PM |