நீண்ட ஆயுள் தேவையில்லை
இத்தவத்திற்கு ஈர மனமே போதும்
உன் ரோஷ வேஷத்திற்கு அர்த்தமில்லை
ஓர் உணர்வு பார்வையே போதும்
சுந்தரப் புன்னகையில் மந்திரம்
அந்தி பொழுதில் அதே ஞாபகம் ஊடகம்
நிறைவேற்றுவாயா உன் இதயத்துடிப்பின் சாஸ்திரம்
அல்லது அது ஆகுமா காற்றின் நிழலோவியம்
மங்கையின் பருவ சுடர்தான் என்று வேண்டாம் அலட்சியம்
அனைவதில்லா அக்னி அது; அபாயம்
உனது அறிவின் சக்தி மேலோங்கி நிற்கும் நிலமை
எனது உணர்ச்சிகளுக்கு கொடுக்கிறாய் முக்கியத்துவயின்மை
காத்திருப்பேனடா இளமை முடிந்தும் கல்லரைவரை
என்றும் என் உள்ளம் கொள்ளை போகுமே
அன்பு கள்வனே
Copyright KatalyZ
posted @ 10:43 AM |